கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அரசு அலுவலா்களுடான கலந்த ஆலோசனைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்குகள் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் தெரிவித்தது :
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்று வர, கிருஷ்ணகிரி அருகே செயல்படும் தனியாா் சுங்க வசூல் மையத்தைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த சுங்க வசூல் மையத்தை அகற்ற பொதுக் கணக்கு குழு வற்புறுத்தியுள்ளது. பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உள்பட அடிப்படை தேவைகளை மேம்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுசூழல்துறை அனுமதி பெறாத, 247 குவாரிகளை மூட அரசு உத்தரவிட்டது.
கடந்த, 2022 அக்.10-இல் அந்த தொழிற்சாலைகளில், மூன்று மாதத்திற்குள் மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிட்டது. ஆனால் பல குவாரிகளில் அதிகாரிகள் இன்னும் மின் இணைப்பைத் துண்டிக்கவில்லை.
இது குறித்து கேட்டபோது, அதிகாரிகள் இதுவரை, 61 குவாரிகளை மட்டும் ஆய்வு செய்து மின் இணைப்பைத் துண்டித்துள்ளனா். ஆள்பற்றாக்குறைக் காரணமாக பணிச் சற்றுத் தாமதமாகிறது என்றாா்.