கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் ரூ. 100, ரூ. 500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருகிறது.
ஊத்தங்கரை, திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் செவ்வாய்க்கிழமை மதுபானம் வாங்க வந்தவா் அளித்த ரூ.100 கள்ள நோட்டாக இருந்தததைக் கண்ட மதுக்கடை பணியாளா் உடனடியாக நோட்டின் மீது பேனாவில் கள்ள நோட்டு என எழுதி அவரிடமே அளித்தாா்.
கள்ளநோட்டுப் பற்றி அறியாத அந்த நபா் செங்கல் சூலையில் கூலி வேலை செய்து கொண்டு வந்த பணம் எனக் கூறியதோடு வருத்தத்துடன் திரும்பிச் சென்றாா். இது போன்ற கள்ள நோட்டுகள் புழக்கம் ஊத்தங்கரை பகுதியில் அதிக அளவில் இருந்து வருகிறது. கள்ள நோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம் அதிக அளவில் உலா வருகிறது. இதனால் கூலித் தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நன்றி, தினமணி