கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் உரிய கட்டணம் செலுத்தி நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2023&24ம் கல்வியாண்டில் காலியாக உள்ள தொழிற்பிரிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை மேற்கொள்ள வருகிற 31ம் தேதி கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்பும் பயிற்சியாளர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் வருகிற 31ம் தேதிக்குள் நேரில் வந்து உரிய கட்டணம் செலுத்தி, நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த பயிற்சி காலத்தின் போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, மூடு காலணி ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலக உதவிதொகை கிடைக்கும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கு அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், பயிற்சி முடித்து செல்லும் பயிற்சியாளர்களுக்கு 100 சதவிகிதம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற தரப்படுகிறது.
எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-04-at-12.43.12-720x620.jpeg)