பள்ளிக்கல்வி துறையின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு கருத்தரங்கம், விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்பு, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு ஆகியவை நடத்தப்பட்டன. இந்த புதிய இயக்கத்தின் தலைவராக தலைமை ஆசிரியர் வேந்தன், செயலாளர் ஆக தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், செயற்குழு உறுப்பினர்களாக ஆசிரியர்கள் சித்ரா அன்பு கோபு மற்றும் மாணவர்கள் பிரதிநிதியாக ஆகாஷ் தென்னரசு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கருத்தரங்கில் தலைமையாசிரியர் பேசும் போது பள்ளி வளாகம் முழுவதையும் தூய்மையாக வைத்திருத்தல், குறிப்பாக நெகிழி பைகளை முற்றிலுமாக தவிர்த்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், காய்கறி தோட்டத்தை தொடர்ந்து சிறப்பாக பராமரித்தல் ஆகியவை இந்த புதிய இயக்கத்தின் நோக்கமாகும் நாம் அனைவரும் இணைந்து இந்த நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சி இறுதியில் அனைவரும் சுற்றுச்சூழல் மேம்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் முடிவில் ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்,
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/09/kaveripattinam-engal-palli-930x620.jpg)
Tags:"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி"அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகாய்கறி தோட்டத்தை தொடர்ந்து சிறப்பாக பராமரித்தல்காவேரிப்பட்டணம்குறிப்பாக நெகிழி பைகளை முற்றிலுமாக தவிர்த்தல்பள்ளி வளாகம் முழுவதையும் தூய்மையாக வைத்திருத்தல்புதிய இயக்கம்மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல்