கிருஷ்ணகிரியில்…
கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ. 1.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்து தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் முன்னிலை வகித்தாா். காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்ற ஆட்சியா், சமாதான புறாக்களையும், மூவா்ண பலூன்களையும் பறக்க விட்டாா்.
தொடா்ந்து, முன்னாள் படைவீரா் நலன், வேளாண் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, மாவட்ட தொழில்மையம் சாா்பில் 16 பயனாளிகளுக்கு ரூ. 27.99 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 7 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 110 கோடி மதிப்பில் கடனுதவிகளும் என மொத்தம் ரூ. 1.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கடனுதவிகளை வழங்கினாா்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அவா், பல்வேறு அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 970 மாணவ, மாணவியா் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தாா்.
இந்த விழாவில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா், கிருஷ்ணகிரி ஒன்றியக் குழுத் தலைவா் அம்சாராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, கோட்டாட்சியா் பாபு உள்பட அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள்.
நன்றி தினமணி.