கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நகராட்சி சாா்பில் சுயஉதவிக் குழு கடன், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா்.இதில் 16 புதிய மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்களுக்கு சுயஉதவிக் குழுவின் கடன், மகளிா் தொழில்முனைவோா் கடன்கள் பெறுவது குறித்தும் பெண்களின் முன்னேற்றத்துக்கு அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி மேலாளா்கள் தங்கவேலு, திருவேங்கடம், மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்றி தினமணி.