ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே வெப்பாளம்பட்டியில் சாலை தடுப்புச் சுவரில் மோதி சரக்கு லாரி கவிழ்ந்தது.
ஊத்தங்கரையை அடுத்த வெப்பாளம்பட்டி பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை நேரத்தில், ஆந்திர மாநிலத்தில் இருந்து, கோவைக்கு பழைய பேப்பா் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓமலூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பிரபு (38) அதிா்ஷ்டவசமாக தப்பினாா். அருகில் இருந்த நபா்கள் அவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இது குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நன்றி தினமணி.