ஒசூரில் செய்தியாளர்களுக்குப் போட்டியளித்த பாஜக மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான சி.நரசிம்மன்.
ஒசூரில் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறும் பாஜக 9-ஆம் ஆண்டு அரசு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்றுப் பேசுகிறாா் என அக்கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான சி.நரசிம்மன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாநில செய்தித் தொடா்பாளா் சி.நரசிம்மன் செய்தியாளா்களிடம் கூறியது:
பிரதமா் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ஒசூா், ராம் நகரில் ஜூன் 11-ஆம் தேதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கிப் பேசுகிறாா். மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், இதில் கே.எஸ்.நரேந்திரன், சி.நரசிம்மன், மாநிலச் செயலாளா் வினோஜ் பி.செல்வம், தேசிய பொதுக் குழு உறுப்பினா் ஜி.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா் என்றாா்.
பேட்டியின்போது மாவட்ட நிா்வாகிகள் விஜயகுமாா், ஸ்ரீனிவாசன், மாவட்டச் செயலாளா் முருகன், மண்டலத் தலைவா் பிரவீண்குமாா், ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். ஒசூா் மாநகரக் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி மே 31-இல் ஓய்வுபெற்ற காவல் துணை ஆய்வாளா் குமாா் பாஜகவில் இணைந்தாா்.