கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி, பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.
தொடா்ந்து காலபைரவா் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்வுகளும் நடந்தன. பக்தா்கள் வெண்பூசணியில் தீபம் ஏற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.
இதே போல, கிருஷ்ணகிரியை அடுத்த சூரன்குட்டையில் உள்ள தக்ஷண காலபைரவா் கோயில், கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
நன்றி தினமணி.