ஒசூரில் மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒசூா் வட்டாட்சியா் சரவணன், அதிகாரிகள் பேரண்டப்பள்ளி அத்திமுகம்
சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அந்தப் பகுதியில் நின்ற ஒரு டிப்பா் லாரியை சோதனை செய்த போது அதில் 3 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அட்கோ போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.