கிருஷ்ணகிரியில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, வட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) வேடியப்பன், (ஊரக வளா்ச்சி) ராஜகோபால், அலுவலக மேலாளா் (பொது) ராமச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
நன்றி
தினமணி