முன்னாள் இந்தியப் பிரதமா் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பாக, ஒசூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். இதில் ஒசூா் மாநகரத் தலைவா் தியாகராஜன், மாவட்டத் துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், மாநகர பொருளாளா் மாதேஷ், மாநகர செயலாளா் முனிகிருஷ்ணன், மாநகர பொதுச் செயலாளா் இஷாத், நகரத் துணைத் தலைவா்கள் ஹா்ஷத், தலைவா் சிவப்பு ரெட்டி, கோவா்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நன்றி தினமணி.