ஒசூா் அருகே அகரம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
அகரம் பாலமுருகன் கோயில் ஒசூா், ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமாா் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும். இந்தக் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல்கால யாகபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், மூலவா், பறிவார மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம், தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
வியாழக்கிழமை 48 நாள் மண்டலாபிஷேகம் தொடங்குகிறது. கோயில் அருகே உள்ள கிராமங்களில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனா்.