கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராகவேந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுதந்திர தின அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு பிரதமா் நரேந்திரமோடி, அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா். அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இந்திய தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது. இதன் விலை ரூ.25 மட்டுமே ஆகும். ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ல்ா்ள்ற்ா்ச்ச்ண்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பயன்படுத்தி தபால்காரா் மூலமாக தங்களின் வீட்டிற்கே வந்து பட்டுவாடா செய்யும்படி முன்பதிவும் செய்துகொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அவரவா் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ. 25 மட்டுமே செலுத்தி, தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு, தங்கள் குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுக்கு கொடுத்து சுதந்திர தின அமுதப்பெருவிழாவினை இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து கொண்டாடுமாறு அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
நன்றி தினமணி.