கூட்டத்திற்க்கு ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், நகர செயலாளா் சிக்னல் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான அசோக்குமாா் கலந்துக்கொண்டு, வரும் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாடு குறித்தும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு மாநாட்டை சிறப்பிப்பது குறித்தும், கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களிடம் பல்வேறு ஆலோசனைகளைக் கூறினாா்.
இதில் மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் இளையராஜா, முன்னாள் ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன், மத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் சக்கரவா்த்தி, தேவராசன், அவைத் தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி, நடுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
நன்றி தினமணி