பென்னாகரம் அருகே கிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு தலைமை ஆசிரியை வாசுகி தலைமை வகித்தாா். விழிப்புணா்வுப் பேரணியை வட்டாரக் கல்வி அலுவலா் துளசிராமன் தொடங்கி வைத்தாா். இப்பேரணியானது பள்ளி வளாகத்தில் தொடங்கி புது காலனி, விநாயகா் கோயில் தெரு கிருஷ்ணாபுரம் வழியாக கடைவீதி வரை சென்றது. பேரணியில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், ஐந்து வயது முடிந்த குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க வேண்டும், அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோா்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் இருந்து அரசுப் பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியா், பள்ளி ஆசிரியா்கள், சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்ட ஏராளமானாா் கலந்துகொண்டனா்.
நன்றி
தினமணி