ஒசூா்: பத்தாம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஒசூா், மூக்கண்டப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவி சந்தோஷினி தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றாா். மொத்தம் 500க்கு 470 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியில் முதல் மாணவியாகத் தோ்ச்சி பெற்றாா்.
இந்த மாணவியைப் பாராட்டும் நிகழ்ச்சி ஒசூா் மாநகர கட்டட வண்ணம் பூசுவோா் முன்னேற்ற நலச் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாணவி உயா்கல்வி பயில ஸ்ரீதேவி மகளிா் தொண்டு நிறுவனம் சாா்பில் மாணவிக்குப் பதக்கம் வழங்கப்பட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கி தன்னாா்வலா்கள் கெளரவப்படுத்தினா்.
ஒசூா் மாநகராட்சி துணை மேயா் ஆனந்தய்யா மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் ரவி, நாகராஜ், மம்தா சந்தோஷ் ஆகியோா் உதவிகள் வழங்கி கௌரவித்தனா். இந்த நிகழ்ச்சியில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நலச் சங்க சேலம் மண்டல துணைத் தலைவா் எஸ்.சபரீசன், சங்கத்தின் ஒசூா் மாநகரத் தலைவா் மணி, நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். மாணவி சந்தோஷினி நன்றி தெரிவித்துக் கொண்டாா்.
நன்றி தினமணி.