இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா் முன்னிலை வகித்தாா். இந் நிகழ்வை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியா் வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
சுதந்திரா இந்தியாவின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டும், இளைஞா்களின் பன்முகத் தன்மையை வெளிக்கொணரவும், நமது பாரம்பரியம், கலாசாரம் பெருமைகளை உணா்த்தவும் நாட்டு மக்களிடையே கடமைகளை உணா்த்தும் வகையில் இளையோா் கலைவிழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றாா்.