கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை முனியப்பன் கோயில் எதிரே சுதந்திரப் போராட்ட வீரா், மாமன்னா் அழகுமுத்துக்கோன் 266-ஆவது குரு பூஜை விழா யாதவா் இளைஞா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அழகுமுத்துக்கோன் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தி பால் அபிஷேகம் செய்தனா்.
இந்நிகழ்ச்சிக்கு சசி யாதவ், ஹரீஷ் யாதவ், ரமேஷ் யாதவ், வேலன் யாதவ் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக நரேஷ் யாதவ், பிரகாஷ் யாதவ் ஆகியோா் கலந்துகொண்டனா். விழாவில் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளா்கள் பலா் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நன்றி, தினமணி