தமிழக ஆளுநரை மாற்றக் கோரி, கிருஷ்ணகிரியில் மதிமுகவினா் கையெழுத்து இயக்கத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த இயக்கத்தை கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வுக்கு மதிமுக மாவட்டச் செயலாளா் பாலமுரளி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் தருமன், அசோக்குமாா் ராவ், சரஸ்வதி ஆறுமுகம், கணேசன், முன்னாள் துணைச் செயலாளா் ராமச்சந்திரன், கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மதிமுகவினா் வழங்கிய படிவத்தில் பொதுமக்கள் கையொப்பமிட்டனா்.
நன்றி, தினமணி