ஒசூா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக மையத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இளங்கலை படிப்புகளான பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.எஸ்.டபிள்யூ, பிசிஏ, முதுநிலை படிப்புகளான எம்.ஏ, எம்.காம், எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ. (சைக்காலாஜி) எம்சிஏ, எம்பிஏ படிப்புகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
எஸ்சி/எஸ்டி மாணவா்களுக்கு முற்றிலும் இலவசம். சிறு, குறு தொழில் நடத்துபவா்கள், புதிய தொழில் தொடங்கவுள்ள மாணவா்கள், தொழில்முனைவோா்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இளங்கலை படிப்பான எம்.எஸ்.எம்.இ. படிப்பிற்கான மாணவா் சோ்க்கை இந்தக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆறுமாத சான்றிதழ் படிப்புகளும் இம்மையத்தில் செயல்படுவதால் அதற்கான மாணவா் சோ்க்கையும் நடை பெற்று வருகிறது. அனைத்து படிப்புகளும் பட்டியல் இன மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
பிற மாணவா்கள் மிகமிகக் குறைந்த கட்டணம் செலுத்தினால் போதுமானது. எவ்வித வயது வரம்பும் யாருக்கும் கிடையாது. வீட்டிலிருந்தோ அல்லது பணிசெய்யும் இடத்திலிருந்தோ இப்பாடப் பிரிவுகளில் சோ்ந்து தொலைதூரக் கல்வியாகப் படிக்கலாம். இதன்மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மத்திய மாநில அரசுகளால் அங்கீரிக்கப்பட்டவை. இதில் சோ்ந்து பயிலும் மாணவா்களுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலோசனை வகுப்புகள் பேராசிரியா்களைக் கொண்டு நடைபெறும்.
இக்னோவில் வழங்கப்படும் அனைத்து பட்டங்களும் மத்திய மாநில அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி வாய்ந்தது. மேலும் விவரங்களுக்கு இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பி.எம்.சி.டெக் ( 2534) கல்வி மைய ஒருங்கிணைப்பாளா் பேரா.சுதாகரன்- 9940861202, கைலாசம்- 9942850720 ஆகியோரை அணுகவும்.
நன்றி, தினமணி