காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுதேந்திர குமாா் (24), காவேரிப்பட்டணத்தில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அவா் கடந்த 13-ஆம் தேதி தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திம்மாபுரம் பிரிவு சாலை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுதேந்திர குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
நன்றி தினமணி.