ஒசூரில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
ஒசூா், அச்செட்டிப்பள்ளியைச் சோ்ந்த ரமேஷ் (25), அத்திப்பள்ளியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் இருசக்கர வாகனத்தில் ஆனேக்கல் – பூனப்பள்ளி சாலையில் அண்மையில் சென்ற போது நிலைதடுமாறி தவறி விழுந்தாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தீபக் (19), ஒசூா், சொக்கநாதபுரத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். சொக்கநாதபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதினாா். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நன்றி தினமணி.