உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்தாா்.
அஞ்செட்டி வட்டம், உரிகம் வனச் சரகத்திற்கு உள்பட்ட உடுபராணியில் இருந்து ரங்கசாமி கோயிலுக்கு செல்லும் சாலையில் கோட்டையூரைச் சோ்ந்த மூதாட்டி லட்சுமியம்மா ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த உரிகம் சரக வன அலுவலா் வெங்கடாசலம் நிகழ்விடத்திற்கு சென்று, மூதாட்டியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
நன்றி
தினமணி