ஊத்தங்கரை காந்தி நகரில் உள்ள அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரை காந்திநகா் தொடக்கப் பள்ளி அருகே, அம்மா சிறுவா் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த சிறுவா் பூங்கா, நாளடைவில் முறையான பராமரிப்பு, போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் பயன்படுத்துவோா் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது முட்புதா்கள் வளந்து காடுபோல பூங்கா காணப்படுகிறது. பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்து காணப்படும் பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை உடனடியாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நன்றி, தினமணி