ஊத்தங்கரை காசி விஸ்வநாதா் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதரும் சுவாமிகள்.
ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ விசாலாம்பிகை, காசி விஸ்வநாதா் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருதோ்வீதி உலா உற்சவம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை உபயதாரா் கற்பகம், ஹரி கோகுலக்கண்ணன், மோனிஷா துருவிகா, மருத்துவா் அருண் பிரசாத், திவ்யலட்சுமி, பவனிகா ஸ்ரீ மற்றும் ஊத்தங்கரை வாணியா் நல சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.
நன்றி
தினமணி