கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை மற்றும் தமுமுக இணைந்து நடத்திய ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தமுமுக நகர மருத்துவா் அணி செயலாளா் இலியாஸ் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் நூா்முஹம்மத் முன்னிலை வகித்தாா். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மதன்குமாா் முகாமைத் தொடங்கி வைத்தாா்.
இதில் ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் லட்சுமி, பேரூராட்சித் தலைவா் அமானுல்லா, அலினா சில்க்ஸ் உரிமையாளா் பாபு அப்துல் சையத், ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஜேஆா்சி ஆசிரியா் கணேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ரத்த வங்கி மருத்துவ அலுவலா் வசந்தகுமாா் தலைமையில், மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். முகாமில் தானமாகப் பெறப்பட்ட ரத்தம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நன்றி தினமணி.