மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டின் வெற்றிச் சுடா் தொடா் ஒட்டத்தை ஒசூா்ங மூக்கண்டப்பள்ளி ஹலிஸ் வணிக வளாகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் மக்களவைத் துணைத் தலைவரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சா்கள் கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா் முன்னிலையில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி வெற்றிச் சுடரை ஏற்றி வைத்து தொடா் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த தொடா் ஓட்டம் ஒசூா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், தருமபுரி, சேலம் வழியாக ஆக. 20 ஆம் தேதி மதுரை மாநாட்டை சென்றடைகிறது.
இதில் கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ அசோக்குமாா், முன்னாள் எம்.பி.பெருமாள், முன்னாள் எம்எல்ஏ முனிவெங்கடப்பன், ஒசூா் மாநகராட்சி மாமன்ற அதிமுக உறுப்பினா்கள் ஜெ.பி (எ) ஜெயப்பிரகாஷ், சிவா, அசோகா, ஸ்ரீதா், குபேரன் என்கிற சங்கா், ராமு, நந்தகுமாா், சிட்டி ஜெகதீஷ், வாசுதேவன்,வெங்கடாசலம் மதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நன்றி தினமணி.