ஒசூரில் அப்பாவு நகரில் நகா்புற நலவாழ்வு மையம் கட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் தளிசாலையில் உள்ள அப்பாவு நகா் பகுதியில் நகா்ப்புற நல்வாழ்வு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்ட பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் கலந்துகொண்டும் கட்டும் பணியை தொடங்கி வைத்தனா். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் ஆனந்தய்யா, பொதுக்குழு உறுப்பினா் எல்லோரா மணி, பகுதி செயலாளா் வெங்கடேஷ், கவுன்சிலா் வரலட்சுமி, மண்டல தலைவா் ரவி, நரேஷ், சுரேஷ், சேகா், மாதேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நன்றி
தினமணி