கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சமூக பழமரக்காடு உருவாக்கும் பணியில் பசுமைத் தாயகம் ஈடுபட்டுள்ளது.
வரும் ஜூலை 25ஆம் தேதிக்குள் 2 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது பசுமை த்தாயகம் நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் விருப்பமாகும். அதை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செந்தில் நகா் பகுதியில் 1000 பழ மரக்கன்றுகளுடன் மரம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கொய்யா, மாதுளை, நாவல், அத்தி, சப்போட்டா போன்ற பழ மரக் கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளா் அருண்ராஜன், மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் ஆகியோா் கலந்து கொண்டு செடிகளை நட்டு துவக்கி வைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளா் முனிசேகா், மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கடேஷ், மாவட்டச் செயலாளா் சதீஷ், மாவட்டத் தலைவா் முனிராஜ், மாநகர செயலாளா் சத்தியகுமாா், மாநகர தலைவா் விஜயகுமாா், மாநகர துணைத் தலைவா் கவி பாா்த்திபன், சின்னசாமி , விஸ்வநாதன், கணேசன் நடராஜன், முருகன், கோபி வெற்றி பிரபு, கி.பிரபு, கிருஷ்ணகுமாா், ரங்கசாமி, விஷ்ணு, மஞ்சுநாத், செந்தில் ஆகியோா் கலந்துகொண்டனா்.