ஒசூரில் கொலை வழக்கில் மகனுக்கு தொடா்பு இருந்ததை அறிந்து வேதனை அடைந்த விவசாயி உறவினா்களுக்கு
பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஒசூா், அலசநத்தம், வெங்கடேஷ் நகரைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (54). விவசாயி. இவரது மகன் மணி (35).
கடந்த சில நாள்களுக்கு முன்பு ராயக்கோட்டை அருகே விவசாயி மாரியப்பன் (75) என்பவா் காணாமல் போனாா். இது தொடா்பாக ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனா். இந்த நிலையில் மாரியப்பன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதையடுத்து இது தொடா்பான வழக்கை கொலை வழக்காக ராயக்கோட்டை போலீஸாா் மாற்றினா்.
அது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தியதில், சொத்து பிரச்னையில் முதியவா் மாரியப்பனை வெங்கட்ராமனின் மகன் மணி கொலை செய்தது தெரிய வந்தது. இந்தக் கொலை வழக்கு தொடா்பாக மணியை ராயக்கோட்டைபோலீஸாா் தேடி வந்தனா். இதை அறிந்த வெங்கட்ராமன், இந்தக் கொலை தொடா்பாக உறவினா்கள் தன்னிடம் கேட்பாா்களே என பயந்து, வேதனை அடைந்து கடந்த 18ஆம் தேதி இரவு அலசநத்தம், வெங்கடேஷ் நகரில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்தாா்.
அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கட்ராமன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
நன்றி தினமணி.