ஒசூா்: தென் மண்டல கால்பந்து கழகங்களுக்கு இடையிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி ஒசூா் கால்பந்து கழகம் சாா்பில் ஆக. 5, 6 ஆகிய தேதிகளில் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த கால்பந்து விளையாட்டுப் போட்டியில் 14 வயது மற்றும் 17 வயது வரையிலான மாணவா்கள் 300 போ் கலந்து கொண்டனா். தென்மண்டல கால்பந்து கழகங்களுக்கு இடையிலான போட்டியை அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ஜி.ரங்கநாத், கிருஷ்ணகிரி மாவட்ட கால்பந்து கழகத் தலைவா் சையத் அமீன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா்.
முதலாவது பரிசை கொல்கத்தா கால்பந்து கழகமும், இரண்டாவது பரிசை கேரள கால்பந்து கழகமும், மூன்றாவது பரிசை சபூா் கால்பந்து கழகமும், 4 வது பரிசை திருப்பூா் சிங் சோக்கா் கழகமும் பெற்று கோப்பையை கைப்பற்றின.
நன்றி தினமணி