ஒசூா் அரசு ஆா்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய பாடநூல்கள் வழங்கும் நிகழ்ச்சி, குழந்தைத் தொழிலாளா் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவா்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் பள்ளி முதல் நாளான திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மேலும் குழந்தைத் தொழிலாளா் இல்லாமை உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் முனிராஜ் வரவேற்றாா். அனைத்து மாணவா்களுக்கும் புத்தகங்கள் வழங்கி மாணவா்களை பள்ளிக்கு வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஸ்ரீதா், இருபால் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.
நன்றி
தினமணி