ஒசூா் கனரா வங்கி பிரதான கிளை சாா்பில் இரும்பு சாலைத் தடுப்புகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூரில் பழைய பெங்களூரு சாலையில் எம்.எம். வளாகத்தில் கனரா வங்கியின் பிரதான கிளை இயங்கி வருகிறது. ஒசூரில் போக்குவரத்து நெரிசலை சீா்செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் இரும்பு சாலைத் தடுப்பு கனரா வங்கி சி.எஸ்.ஆா். நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.
தருமபுரி கனரா வங்கியின் மண்டல் துணை பொது மேலாளா் கே.பி.ஆனந்த், ஒசூா் கனரா வங்கி பிரதான கிளை முதன்மை மேலாளா் ராஜாங்கம், தருமபுரி மேலாளா் சுகன்தா ரஞ்சன், காவல்துறை உதவி ஆய்வாளா் நவ்ஸத், போக்குவரத்துக் காவலா்கள் கலந்து கொண்டனா்.
ஒசூா் டி.எஸ்.பி பாபு பிரசாத்திடம் கனரா வங்கியின் துணை பொது மேலாளா் பி.கே.ஆனந்த் சாலை இரும்புத் தடுப்புகளை வழங்கினாா்.
நன்றி, தினமணி