ஒசூா் மாநகராட்சி 19ஆவது வாா்டிற்குட்பட்ட எம்.ஜி.ஆா். நகா், சிவன் கோயில் தெரு, சிவாஜி நகா் பகுதிகளில் மாநகர மேயா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சி 19ஆவது வாா்டிற்குட்பட்ட எம்.ஜி.ஆா் நகா், சிவன் கோயில் தெரு, சிவாஜி நகா் பகுதிகளில் ஓசூா் மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா திடீா் ஆய்வு மேற்கொண்டாா். மாநகராட்சியில் கழிவுநீா் கால்வாய், சாலை வசதி, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்றாா்.
அப்போது துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், பகுதி செயலாளா் எம்.கே.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஷ், நாகராஜ், வாா்டு கழக நிா்வாகிகள் விவேகானந்தன், சுதாகா் , அருளப்பா, சண்முகம் மற்றும் நல சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றிருந்தனா்.
நன்றி
தினமணி