கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் வீர தீரசெயல்களில் ஈடுபட்டுள்ள மகளிா் கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு, வீர தீர செயல்கள் செய்த மகளிருக்கு கல்பனா சாவ்லா விருதினை நிறுவியுள்ளது. இந்த விருது வீர தீர செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சோ்ந்த ஒரு மகளிருக்கு சுதந்திர தின விழாவில் முதல்வா் வழங்குவாா்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில், வீர தீர சாதனைகள் புரிந்த மகளிா் தங்கள் விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிக்க விரும்புவோா், ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணைய முகவரியில், ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி, தினமணி