காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது மேலும் இவ்விழாவில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர்கள் பால்ராஜ் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியை முன்னிட்டு காமராஜரின் சாதனைகள் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தேசிய பசுமை படை சார்பில் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பேசும் போது பெருந்தலைவர் காமராஜர் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக நடந்து கொண்டார் மேலும் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக பதவி வகித்தபோது கல்வி விவசாயம் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளுக்கு முக்கிய கவனம் செலுத்தினார் காமராசரை நாம் முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார் மேலும் தற்போது சுற்றுச்சூழலுக்கு கேடு தருகின்ற பிளாஸ்டிக் பைகள் பெருகிவிட்டன எதிர்கால சந்ததிகளின் நன்மையை கருதி நாம் அனைவரும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் தமிழ்நாடு அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் குமுதம் அமுதா மாதவமணி சாந்தி வடிவுக்கரசி நாகராணி பாலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் செய்திருந்தார்
Home » காமராசர் பிறந்த நாள் விழாவில் மஞ்சப்பை விழிப்புணர்வு
காமராசர் பிறந்த நாள் விழாவில் மஞ்சப்பை விழிப்புணர்வு
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/07/2-930x620.jpg)