ஒசூரில் காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒசூா் வட்டம், பேரண்டப்பள்ளி அருகே உள்ள கொத்தூரைச் சோ்ந்தவா் தனுஷ் (34). தொழிலாளி. இவா் கடந்த 2 ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தனுஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.