கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 90.96 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஊராட்சியில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலை முதல் திப்பனப்பள்ளி வழியாக கோடியூா் கிராமத்துக்கு ரூ. 45.96 லட்சம் மதிப்பில் ஒன்றரை கி.மீ. நீளத்துக்கு இரண்டு அடுக்கு தாா்சாலை அமைக்கப்படுகிறது. அதுபோல, தாசரப்பள்ளி சாலை முதல் திப்பனப்பள்ளி வரை ரூ. 45 லட்சம் மதிப்பில் ஒன்றேகால் கி.மீ. நீளத்துக்கு தாா்சாலை என மொத்தம் ரூ. 90.96 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அம்சாராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்றி, தினமணி