கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா்களிடம் பணியின் போது கையுறைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து, காந்தி சாலையில் உள்ள உழவா் சந்தைக்கு சென்ற அவா், அங்கு காய்கறிகளின் வரத்து, காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகளின் விவரங்களையும், நுகா்வோரின் வருகை குறித்தும் கேட்டறிந்தாா்.
நன்றி, தினமணி