கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40 ஆண்கள் அணியும், 20 பெண்கள் அணியும் கலந்து கொண்டன. நாக்–அவுட் முறையில், 2 நாட்கள் நடந்த இப்போட்டியில், இறுதி போட்டியில் சூளகிரி மற்றும் அஞ்செட்டி அணிகள் மோதின. இதில், சூளகிரி அணி 40 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.
இதே போல், பெண்களுக்கான இறுதி போட்டியில் கிருஷ்ணகிரி, ஓசூர் அணியும் மோதின. இதில், கிருஷ்ணகிரி பெண்கள் அணி, 38 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா, ஈஷா ஒருங்கிணைப்பாளர்களான சுந்தரப்பாண்டியன், கணேசன் ஆகியோர் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கபடி கழக செயலாளர் சக்கரவர்த்தி, விளையாட்டுத் துறை அமைப்பாளர் சந்தோஷ், நகர்மன்ற உறுப்பினர் ஜெயகுமார் ஆகியோர், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசும் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-04-at-12.43.12-720x620.jpeg)