கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியை லட்சுமி வரவேற்புரையாற்றினார்.
இதில், அரசு பள்ளி, கல்லூரிகளின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரும், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறத்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக விபத்துகளும் அதிகரித்து உள்ளது. படிக்கும் போது வாகனங்கள் ஓட்டுவதற்கான எண்ணம் வரக்கூடாது. ஆனால் சாலை விதிமுறைகள் குறித்து ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச்சங்கத்தின் மவாட் இணை செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.