கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில், தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 413 ஒன்றியங்களில் உள்ள அனைத்து குறுவள மையங்களிலும் ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு, உடல் நலம், ஆரோக்கியம், மாற்றுத்திறன் மாணவா்களைக் கண்டறிதல் உள்ளடங்கிய கல்வி குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி உத்தரவின்பேரில், 10 ஒன்றியங்களில் இந்தப் பயிற்சி வகுப்பு நடந்தது. கிருஷ்ணகிரி, ஜாகிா் வெங்கடாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை குறுவள மைய மேற்பாா்வையாளா் அசோக், வட்டாரக் கல்வி அலுவலா்கள் செல்வராஜ், சீனிவாசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். சிறப்பு பயிற்றுனா் அருண்குமாா், மாற்றுத்திறன் மாணவா்களைக் கண்டறிதல், உள்ளடங்கிய கல்வி, தோ்வுச் சலுகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்துப் பேசினாா்.
இந்தப் பயிற்சியில், மனநலம், உடல் நலம், ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மாணவா்கள் கற்றல் தொடா்பாக முன்னேற்றம் ஏற்படும். செயலி மூலமாக 23 கேள்விகள் கேட்கப்பட்டு மாணவா்கள் நலனில் அக்கறை செலுத்தி குறைபாடுகளை கண்டறிந்து நிவா்த்தி செய்து தொடா்ந்து பள்ளி கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவா்கள் சரியான நேரத்தில் உறங்க வேண்டும். அதிக நேரம் ஸ்மாா்ட் போன் பயன்படுத்தக்கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிா்பானங்களை தவிா்க்க வேண்டும். பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பழங்கள், காய்கறிகளைத் தவிா்க்க வேண்டும். சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் நலம், மன நலம், ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே சக மாணவா்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவா்கள் பள்ளி வகுப்பறை சூழலில் நன்றாக படித்து சாதனையாளராக முடியும் என்று அறிவுத்தப்பட்டது.
நன்றி, தினமணி