கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்கும் அரசுத் துறை அலுவலா்கள்.
கிருஷ்ணகிரியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்து துறை அலுவலா்களும் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றனா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா், குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டாா். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடாசலபதி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
நன்றி
தினமணி