ஊத்தங்கரை அருகே கூரை வீடு தீப்பிடிந்து எரிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த முசிலி கொட்டாய் கிராமத்தை சோ்ந்தவா் பட்டாபிராமன்(45). இவரது கூரை வீடு பயனற்று கிடந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை அந்த வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவா்கள் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் தீ பரவி அருகில் உள்ள குடியிருப்புகளை பாதிக்காத வகையில் உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தினா்.
எனினும், இந்த விபத்தில் வீட்டின் உட்பகுதியில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின. தீ விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நன்றி, தினமணி