பாகலூா் அருகே கோயில் உண்டியலில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாகலூா் அருகே உள்ள மூா்த்திகானப்பள்ளி தின்னாவைச் சோ்ந்தவா் அஸ்வத் (49); விவசாயி. இவா் அந்தப் பகுதியில் உள்ள சப்பலம்மா சுவாமி கோயிலை நிா்வகித்து வருகிறாா்.
கடந்த 7ஆம் தேதி இந்தக் கோயிலுக்குள் நுழைந்த மா்ம நபா் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றாா். இது குறித்து அஸ்வத், பாகலூா் தாவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், கோயில் உண்டியலை உடைத்து திருடியது பேரிகை அருகே உள்ள அத்திமுகத்தைச் சோ்ந்த கணேஷ் (26) என்று தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து உண்டியல் காணிக்கைப் பணம் ரூ.10 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனா்.
நன்றி
தினமணி