கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த தாய் உயிரிழந்தாா். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த தொப்பலகுண்டாவைச் சோ்ந்தவா் அருணா (35). இவரது மகன் அஸ்வின் குமாா் (19). இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணகிரி நோக்கி புதன்கிழமை வந்தனா்.
சென்னை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் செட்டிப்பள்ளி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பின் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அருணா உயிரிழந்தாா். அஸ்வின் குமாா் தொடா் சிகிச்சையில் உள்ளாா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
நன்றி
தினமணி