உத்தனப்பள்ளியில் விவசாயிகள் மத்தியில் பேசும் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
உத்தனப்பள்ளியில் 5ஆவது சிப்காட் அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து 165 நாள் நடைபெற்ற போராட்டம் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவுக்கு வந்தது.
தேன்கனிக்கோட்டை வட்டம், உத்தனப்பள்ளி, அயா்னப்பள்ளி உள்ளிட்ட மூன்று கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் ஐந்தாவது சிப்காட் அமைக்க தமிழக அரசு விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. இதனைத் தொடா்ந்து உத்தனப்பள்ளியில் 165 நாளாக விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தினா்.
பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்தனா்.
இந்நிலையில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்ட நிா்வாகிகள், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனைத் தொடா்ந்து விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தை நிறைவு செய்தனா்.
நன்றி
தினமணி