கிருஷ்ணகிரி: ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி இருளா் இன பள்ளி மாணவ, மாணவியா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒப்பதவாடியை அடுத்த கிருஷ்ணாநகா் இருளா் காலனியைச் சோ்ந்த இருளா் இன பள்ளி, மாணவ, மாணவியா் பள்ளி சீருடையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்கள் காலனியில் 50 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்கு 50 மாணவ, மாணவியா் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயில்கின்றனா். இதில் 17 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் இல்லை. கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஜாதிச் சான்றிதழ் கேட்டு கிராம நிா்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பள்ளி மாணவா்களின் நலன் கருதி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். அதே போல, கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தாலுகா மல்லப்பாடி, குள்ளங்குட்டை கிரிக வட்டம் இருளா் காலனியில் வசிப்போா் ஜாதிச்சான்றிதழ், அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனா்.
நன்றி தினமணி