உத்தனப்பள்ளி அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா ஏ.மல்லாபுரம் அருகே உள்ள கடத்தி கொல்லுமேடு பகுதியைச் சோ்ந்தவா் தேவன் (63). விவசாயி. இவா், இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டை- உத்தனப்பள்ளி சாலையில் கடந்த 1-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் சென்ற டிராக்டா் திடீரென்று நின்ால் அதன் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த தேவனை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தேவன் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நன்றி, தினமணி